இனி ஆரம்பம்
  கதை தொடர்ச்சி-1
 

பூபதி அந்தபெண்ணை விடுடா அவளுக்கு குடுத்துவெச்சதது அவ்வளவுதான்னு நினைச்சுக்க  என ஆறுதல்கள் சொல்லி தேற்றி அனுப்பினாலும் அந்நிகழ்வு என் மனதில் இழப்பு என்பதின் வலி எப்படிபட்டது என்பதை தடம்பதித்துசென்றது.

 

பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரி வாழ்வினில் கால் பதித்து கவலை மறந்திருந்த காலம் அது. கனவுகளை மட்டுமல்ல காதலையும்சுமந்தே கல்லூரி வாழ்க்கை அமைந்துவடுகிறது பலருக்கு.

 

  உண்மைதான் எனக்கும் ஒருத்தியை பிடித்திருந்தது. இரைட்டை சகோதரிகள்  இருவரும் ஒரே வகுப்புதான். மூத்தவளை விரும்பினேன் . எனக்கு குழப்பமே  இருந்ததில்லை இருவரின் தோற்றத்தில் யார் அக்கா யார் தங்கை என்பதில்.

 

கல்லூரியிலும் பரவியது நான் காதலிப்பது. அந்த பெண்ணுக்கும் தெரியும் ஆனால் நான் நேரில் வெளிப்படுத்தியது கிடையாது. பார்ப்பது ரசிப்பதிலேயே பறிபோனது ஒன்றரை வருடங்கள்.

 

பூபதி கவிதை பேச்சுபோட்டி என கல்லூரியின் ஒட்டுமொத்த உருவமாக இருந்தான். பெண்களிடமும் சகசமாக பேசுவான்அவனுக்கு சில பெண்கள் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது.

 

அப்படித்தான் நான் விரும்பும் பெண்ணிடமும் பேச ஆரம்பிச்சான். யாரு வெளிப்படுதியிருக்க கூடும் எனத் தெரியவில்லைஒரு கட்டத்தில் இருவரும் விரும்பும் செய்தி கிடைத்தது.

 

அந்நாட்களில் மனசுக்கு ஏதாவதென்றால் பூபதி அக்காவைத்தான் போய்ப் பார்ப்பேன். அன்றும் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வேறு ஒன்றை சிரித்துத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். என்னுள் ஏதோ அழுத்தி என்னமோ நடக்கிறது.  கண்ணில் இருந்து பொல பொலனு தண்ணி கொட்டுது. என்னால அதக்கட்டுப்படுத்த முடியல. சிரிச்சிகிட்டே இருக்கேன் ஆனா கண்ணில் பொல பொலனு தண்ணி வருது அக்கா பதறிபோயிட்டாங்க

 

என்னடா தம்பி என்ன ஆச்சு  எங்கிட்ட சொல்லுறதுக்கென்னடா என்று  கேட்டாலும் ஏதோ சொல்லி மறைக்க முயன்றேன்.

 

ஆனால் அக்கா புரிங்சுகிட்டாங்க. மறுபடியும் மீண்டும் சிரிச்சு பேச ஆரம்பிச்சிட்டேன்.

 

பூபதியும் நானும் ஒரே இடத்தில் டியூசன் போனோம். வாத்தியார்  நண்பர் மாதிரி. அவரிடம் அவன் அவளின் மேற்படிப்பு எதிர்காலம் பற்றியெல்லாம் இலைமறைகாயாய்  பேசுவான்வாத்தியாரும் புரிந்து கொண்டு குசியாகிவிடுவார். ஆர்வமாக அவனுக்கு பதில்பேசிக் கொண்டு இருப்பார்.

 

அந்நேரங்களில் எனக்கு சங்கடமாயிருக்கும் எந்திரிச்சு ஓடிடலாம் என நினைப்பேன் முடிவதில்லை.

 

இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாய் எனக்கும் பூபதிக்கும் இடையில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது. என் நணபர்களும் புரிந்து கொண்டு கொஞ்ச நாள் அவனுடன் பேசுவதில்லை.

 

பூபதியும் அவளும் பஸ்சில் பேசிகிட்டே வருவாங்கநான் பின்னாடி இருந்து கேட்டுகிட்டே வருவேன். எனக்கு கேக்கணும் என்றே பேசுவாங்கலானு தெரியாது

 

 தமிழ், ஆங்கிலம், தெலுங்கு எல்லாம் எனக்கு தெரியும்  அதனால எனக்கு வரும் மாப்பிள்ளை  இண்டர்நேசனல் லெவல்ல வரணும் என்பாள்.

 

அதை இப்ப நினைச்சாலும் எனக்கு சிரிப்பு வரும்.

                                                                கதை தொடர்ச்சி-2

 

 
  Today, there have been 3 visitatori (8 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free