இனி ஆரம்பம்
  வாழ்த்துக்கள்
 

மே 27-07

என் இனிய நண்பரும் சமூக ஆர்வளருமான இரா.பிரவீன்குமாரின் வெள்ளித்திரை எனும் கட்டுரை திண்ணை இணையத்தில் வெளிவந்தது. உங்களுக்காக அதன் இணைப்பு இங்கே

வெள்ளித்திரை

 திரு. பிரவீன் குமார் அவர்களுக்கு

 

வணக்கம். உங்களின் வெள்ளித்திரை கட்டுரையை படிக்க நேர்ந்தது. வரவேற்கத்தக்க கட்டுரை. என் வாழ்த்துக்கள். தனி ஒரு மனிதனாக புறப்பட்டுள்ளதாக கூறியுள்ளீர்கள்.தனிமனித கனவுகள் தான் பிற்காலத்தில் விஸ்வரூபமெடுத்து இச்சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். உங்களின் பயணம் சினிமாவை தடுப்பதாக இருக்காது என்பது என் எண்ணம்  மேலும் ஒட்டு மொத்த சினிமாக்காரர்கள் மீதும் உங்களின் வெறுப்பு இருப்பின் உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும். பிரபலதன்மையுள்ள  வெகு சிலரால்தான் (இவர்கள் மனிதநேயமற்றவர்களாகத்தான் எனக்கு காட்சி தருகிறார்கள்) இந்த பிரச்சினை ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது.

உங்களின் தனிமைப்பயணத்தில் என்னையும் துணைக்கு சேர்த்துக்கொள்ளுங்கள்

தோழமையுடன்: பாண்டித்துர

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

நேற்று (26-05-2007) சிங்கப்பூரின் கவிமாலை அமைப்பு தனது 7வது ஆண்டு (84வது மாத நிகழ்வை) நிறைவை கொண்டாடியது. திர் வரும்மாதத்தில் எட்டாம் ஆண்டில் அடி எடுத்துவைக்கிறது.

 

கவிதையை கவிஞர்களை நேசிக்க கூடிய அமைப்பு கவிமாலை.  என்னை பொருத்த வரையில் ஒரு அமைப்பை ஆரம்பிப்பது என்பது மிகச்சுலபம் ஆனால் வெற்றிகரமாக ஆரோக்கியமா நடத்துவது என்பது?

 

கவிமாலைபற்றி பெரும்பாலன ரசிகர்கள் சொல்வது அந்த அமைப்பாப்பா ரொம்ப  நல்லா இருக்குமே சிறப்பாக நடத்துவார்களே என்பார்கள்.

 

கவிமாலையின் இன்றைய வளர்சிக்கு அன்றே வித்திட்டவர்கள் கவிஞர்கள் பிச்சினிக்காட்டு இளங்கோ புதுமைத்தேனீ அன்பழகன் ஆசியான் கவிஞர் .து.மு.இக்பால் அவர்கள்.  அவர்களுக்கு என் நன்றியையும் கவிமாலையின் எட்டாவது ஆண்டிற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

 இதுவரை கவிமாலையில் கலந்துகொண்டு சிறப்பித்த கவிஞர்கள் மற்றும் கவிதைப்பிரியர்களுக்கும் என் நன்றிகள்.

 

நன்றி

மற்றும் வாழ்த்துக்களுடன்

 பாண்டித்துரை

 
  Today, there have been 1 visitatori (18 hits) on this page!  
 
=> Vuoi anche tu una pagina web gratis? Clicca qui! <=