இனி ஆரம்பம்
  கதை தொடர்ச்சி- 3
 

தாத்தாவைக் கவனித்தபோது ,அவர் கொஞ்சமும் வருத்தபட்டதாகத் தெரியவில்லை. முகத்தில் புன்னகையே இருந்தது. இதைப்பார்க்கும் போது சுக்கா இதுக்காகவே தினமும் குடிக்கலாம் என்று நினைத்தேன்.

  

  சரி தாத்தா, நாங்க கிளம்புறோம் ஆன்டியை கேட்டதா சொல்லுங்க, என்றான். முன்னா. அருகே ஆமோக்கியாவில் தான் எங்கள் வீடு என்பதால் நானும் முன்னாவும் நடக்க ஆரம்பித்தோம்.

  

  ஓளிக்கற்றையை விரட்டிப் பிடிப்பதாய் பேருந்து எங்களை கடந்து சென்றது. என் மனதும் கூடத்தான். எப்பப்பார்த்தாலும் குடிச்சிகிட்டு இருக்கிற மாமா, எப்பப்பார்த்தாலும் அவரை திட்டிக்கொண்டிருக்கும் அவரின் அண்ணா, முக்குகடை சொக்கன், எங்க ஊரு ராவுத்தர், அம்மன் கோவில் பூசாரி, வழுக்கத் தலையை மறைக்க பின்னாடி முடியை முன்னாடி கொண்டுவந்து சீவும் தலைமையாசிரியர், அப்புறம் பூங்கொடி டீச்சர், எதிர்த் வீட்டு பாட்டிம்மா, என்கிட்ட மட்டும் டிக்கட் வாங்காத கண்டக்டர், எப்பத்தா கிழவி, குண்டு பாப்பா, மிட்டாய் மாது, நல்லா சாப்புடு சிதம்பரம்னு முகத்தாலே அதட்டும் சியாமளா, சின்ன வயசு சீனு, அம்மா, புல்புல்னு...

  

  நினைவுகளுடனேயே படுக்கையில் வீழ்ந்த போது.

  

  என்ன மாப்ஸ் ரொம்ப களைப்பா இருக்கா..? காலையில எந்திரிக்க அலாரம் வைக்கட்டுமா..?

  

 ஏதோ குரல் ஒன்று தொலைவில் எங்கேயோ இருந்து கசிந்துவருவதாகப்பட்டது.

-  - - பாண்டித்துரை

 

 

 
  Today, there have been 1 visitatori (16 hits) on this page!  
 
=> Vuoi anche tu una pagina web gratis? Clicca qui! <=