இனி ஆரம்பம்
  கதை தொடர்ச்சி- 1
 

என்னத்தச் சொல்ல, ஒரு பொண்ணோட மணிக்கணக்கா பேசுனா காதல் தான்னு நம்ம ஊரில் எழுதப்படாத சொல்லா இன்னைக்கும் நடைமுறையில் இருக்கில்ல.

  நாங்க போனில் பேசிக்கிட்டு இருக்கும் போது, முன்னா சத்தமாக கத்துவான் கேத்ரீனா கேட்பா, யாரு அது முன்னா தானே ? நாட்டி பாய்னு சிரிச்சுகிட்டே சொல்லுவா. இப்படியாய் நகர்ந்தன நாட்கள்.

  

  ஒருநாள் வந்தனா,தனக்கு திருமணம் நிச்சயம் ஆனதற்கு செந்ததோசா தீவில் பார்ட்டி கொடுத்தாள்.

  

  சாரு, நிவேதன், முன்னா, கேத்ரீனா, சுகாங், மக்காய், சுப்புனு எண்ணிப்பார்த்தா பதினைஞ்சு பேர்எப்படியும் அன்றைக்கு ஆயிரம் வெள்ளி செலவாகியிருக்கும்முன்னா 250 வெள்ளி குடுத்திருப்பான்.  

 நான் பரிசுப்பொருளாய்பார்த்திபனின் கிறுக்கல்கள்புத்தகம் குடுத்தேன்என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு  “ஏன் அப்படியே ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கிட்டு வந்து குடுக்குறது தானே? கிறுக்கா, யாரு வேண்டாம்னா அத இங்கதான் குடுக்கனும்மா? என்று சிரித்தாள்.

  

  இங்கேயும் அந்த சிவாஜி தாக்கம், மிதமான இருட்டில் பியர் கோப்பைகளின்  சப்தங்களின் இடையே மெல்லியதாய் பாடல் கசிந்து வந்து கொண்டிருந்தது.

 

  மக்காய் கூட ச்சீ ச்சீனு முனுமுனுத்து கொண்டிருந்தது எனக்கு பிடித்திருந்தது.

  

  எங்க ஊருல ஜாக்கிசான் படத்தை பார்த்துவிட்டு ஊனு கத்துனதை நினைச்சுகிட்டேன், முன்னா சிரிச்சான்.

  

  வந்தனா முகத்தில் கொஞ்சமாய் சோகம் இருந்ததை காண முடிந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த அளவிற்கு சுதந்திரம் இருக்குமா என்பது தெரியலைதான். என்னதான் சிங்கப்பூர் சூழலில் பிறந்து வளர்ந்தாலும் திருமணத்திற்கு பின் பெண்களின் மகிழ்வுகளில் பல பறிபோய்விடத்தான் செய்கிறது.

  

  நான் ஒரு டைகர் பியர் மட்டும் எடுத்துக்கிட்டேன். கேத்ரீனா ஒய்ன் எடுத்துக்கிட்டாஅவள் ஒய்ன் சாப்பிடுறதை பார்க்கும் போது, பெண்களிடம் தான் தண்ணியடிக்க கத்துக்கணும்னு தோன்றியது எனக்கு. அதை கையில் ஏந்தி பருகியதில்  அவ்வளவு நளினம்  இருந்தது.

  

  வந்தனா சாருவைத்தான் கல்யாணம் பண்ணுவா என்று நினைத்திருந்தேன் என்றாள். கேத்ரீனா.

  

  ஏய், முதல்ல நீ தமிழ்படம் அதிகமாகப் பார்ப்பதை நிறுத்து என்றேன்.

  

  அப்படிப் பண்ணியிருந்தா வந்தனா சாருவைக் கல்யாணம் பண்ணியிருப்பாளா? என்றாள். ஒய்ன்  நிறைந்திருந்த கண்களுடன் கேத்ரினா.

  

  வ்வா வ்வானு... யாரோ வாந்தியெடுக்கும் சப்தம் கேட்டது.  வழக்கம்போல சுகாங் தான். எப்பவுமே அவன் இப்படித்தான். அதிகமாயிடுச்சுனு தெரியும் ஆனாலும் அடம் பிடிச்சுக் குடிப்பான் கடைசியில வாந்தியெடுப்பான். நானும் ஒவ்வொரு முறையும் பசங்களை திட்டுவேன் நீங்கதான்டா அவன கெடுக்குறிங்கனு.

கதை தொடர்ச்சி- 2

 
  Today, there have been 4 visitatori (183 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free